இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது பெற்றோரை சந்திப்பதற்காக குழந்தையுடன் அவர் வீட்டுக்கு வந்த போது, விரக்தி அடைந்த அவரது பெற்றோர் அந்த இளம் பெண்ணை திரும்ப அவருடைய கணவரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் சங்கிலியால் கட்டி சிறை வைத்துள்ளனர்.
தன்னுடைய மனைவியை மீட்க, அவரது கணவர் பல முயற்சிகள் செய்தும் முடியாத நிலையில், நீதிமன்றத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் சோனா பெற்றோர் வீட்டை சோதனை செய்து, இளம் பெண்ணையும், அவருடைய குழந்தையையும் மீட்டு உள்ளனர். பின்னர் வழக்கறிஞர் மூலம், அவருடைய கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சோனால் பெற்றோர் மீது எந்த வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், அந்த பெண் நேரடியாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.