விருந்தினர்களுக்கு சாப்பாடு பற்றாக்குறை.. திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்..!

Siva

செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (11:23 IST)
திருமணத்திற்கு வந்த  விருந்தினர்களுக்கு சாப்பாடு பற்றாக்குறை ஏற்பட்டதால் திருமணத்தையும் மணமகன் வீட்டார் நிறுத்த முயற்சித்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் என்ற பகுதியில் பிரமோத் மற்றும் அஞ்சலி குமாரி ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பு விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட நிலையில், திடீரென உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இதனால் மணமகன் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.

இதையடுத்து, மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சனையை தீர்க்க காவல்துறை தலையிட்டது. இரு தரப்பினருடனும் பேசிய காவல்துறை, உணவு பற்றாக்குறை ஏற்படாமல் கூடுதல் உணவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தது. இருப்பினும், மணமகன் குடும்பத்தினர் திருப்தி அடையாத நிலையில், மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரையும் காவல்துறையினர் நேரடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கேயே திருமணம் நடத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மணமக்கள் ஜோடியாக திருமண மண்டபத்திற்கு வந்தபோது, சாப்பாடு பற்றாக்குறை பிரச்சனையும் தீர்க்கப்பட்டதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்