நாங்கள் வானத்தை நோக்கி தான் சுட்டோம்: மீனவர் மரணம் குறித்து கர்நாடக வனத்துறை விளக்கம்..!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (17:01 IST)
நாங்கள் வானத்தை நோக்கி தான் சுட்டோம் என்று மீனவர் ராஜா பயத்தில் தண்ணீரில் விழுந்து உயிரிழந்து விட்டார் என்றும் அவர் மீது துப்பாக்கி கொண்டு படவில்லை என்றும் கர்நாடக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது 
 
மேட்டூரை சேர்ந்த மீனவர் ராஜா மான் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது கர்நாடக வனத்துறையினர் சுட்டதால் காலமானார் என்று கூறப்பட்டது. இது குறித்து கர்நாடக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
இரவு நேரத்தில் இரண்டு படகுகளில் ஆறு பேர் அத்துமீறி உள்ளே நுழைந்ததால் டார்ச் லைட் மூலமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தோம் என்றும் மான் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி மூலம் எங்களை நோக்கி சுட்டதால் நாங்கள் பதிலுக்கு வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினோம் என்றும் தெரிவித்துள்ளது.
 
எங்களுடைய துப்பாக்கி சூடு காரணமாக பயத்தில் ஆற்றில் இறங்கிய போது தான் தண்ணீரில் மூழ்கிய ராஜா உயிரிழந்தார் என்றும் அவர் மீது துப்பாக்கிக் கொண்டு எதுவும் படவில்லை என்றும் கர்நாடக வனத்துறை அதிகாரி அஞ்சு ராஜ் அவர்கள் விளக்கமளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்