தமிழகத்தின் 4 நகரங்களில் மாசு அதிகம்: மத்திய அரசு தகவல்..!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (19:01 IST)
தமிழகத்தில் நான்கு நகரங்கள் அதிக மாசடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் நாடு முழுவதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி தூத்துக்குடி சென்னை மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிக அளவில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
23 மாநிலங்களில் 131 நகரங்களில் மாசு அதிகரித்து உள்ளது என்றும் காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்