தமிழரின் உயரிய கலாச்சராத்தை நினைத்து பெருமையடைகிறோம்: மோடி ட்வீட்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (11:08 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் மற்றும் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் ஆர்பாட்டத்தில் புரட்சி செய்து வருகிறார்கள்.



ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பீட்டாவை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்நிலையில், தமிழர்களின் உயரிய கலாச்சராத்தை  நினைத்து பெருமையடைகிறேன் என்றும், தமிழர் பண்பாட்டை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 
 
மாநில அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரையில்