பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவின் நிலை?

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (10:53 IST)
வாஷிங்டன் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.  


 
 
இதனை தொடந்து அமெரிக்க துணை அதிபராக மைக்கேல் பென்ஸ் பதவியேற்றுக் கொண்டார். இதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களின் முன்னிலையில், அமெரிக்க அதிபராக தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
 
அதில் டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு நன்றி. ஒபாமாவுக்கும் நன்றி. இனி அமெரிக்கா முன்பு இருந்ததை போல வெற்றிகளை பெறத் துவங்கும். ஆனால் அந்த வெற்றிகள் முன் எப்போதும் இல்லாத அளவில் இருக்கும். நமது கனவுகள், வளங்கள், எல்லைகள் ஆகியவற்றை மீண்டும் பெறுவோம் என தெரிவித்தார்.
 
மேலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் புதிய சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளில் அதிகம் கவனம் செலுத்துவோம் என டிரம்ப் தெரிவித்தார். 
 
இந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்