20 வருடங்கள் கழித்து புயலின் பிடியில் குஜராத்? – ”வாயு” புயல் ஒரு பார்வை

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (20:49 IST)
அரபிக்கடலில் மையம் கொண்ட வாயு புயலானது நாளை குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெராவலிலிருந்து துவாரகாவுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது புயலின் வேகம் மணி நேரத்திற்கு 150 கி.மீ முதல் 180கி.மீ வரை இருக்கிறது. இது கரையை கடக்கும்போது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஜூன் மாதத்தில் சரியாக 20 வருடங்களுக்கு முன்னால் குஜராத் ஒரு மிகப்பெரும் புயலை எதிர்கொண்டது. 1998ல் வீசிய அந்த புயலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். சுமார் 165கி.மீ முதல் 195 கி.மீ வேகம் வரை வீசிய புயலில் குஜராத் மிகப்பெரும் அழிவை சந்தித்தது. கிட்டதட்ட அதேஅளவு வேகத்திலேயே வீசப்போகும் இந்த புயலானது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நிர்ணயிக்க இயலாது.

பிரதமர் மோடி “குஜராத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குஜராத் மக்களுக்காக பிரார்த்திப்போம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நம்மால் தற்போது முடிந்ததும் அதுதான்!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்