விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 – இஸ்ரோ தகவல்

புதன், 12 ஜூன் 2019 (16:45 IST)
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 1 என்ற விண்கலம் 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 1 ஐ விட மேம்பட்ட தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2. இதற்காக சுமார் 800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விண்கலத்தில் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் வாகனம் உடன் செல்கிறது. மேலும் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் பகுதிகளை ஆய்வு செய்யபோவதாக கூறப்படுகிறது.
இந்த விண்கலம் எதிர்வரும் ஜூலை 15 அன்று அதிகாலை 2.15க்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்