2 பந்த்களுக்கு பிறகு மீண்டும் முற்றுகை போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் அறிவிப்பால் எல்லையில் பதற்றம்..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:44 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரக்கூடாது என ஏற்கனவே கர்நாடகாவில் இரண்டு நாட்கள் பந்த் நடத்திய நிலையில் இன்று திடீரென கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ்நாடு கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி என்ற பகுதியில் இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்

இதனால் பெங்களூர் சுங்கச்சாவடி அருகே வாகனங்களை மறித்து போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்று கேஎஸ்ஆர் அணையை முற்றுகையிடவும் வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்