இதுகுறித்து போராட்டம் செய்யும் மாணவிகள் கூறியபோது, *மாணவிகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுகுறித்து புகார் அளித்தால், மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதிகள் செய்து தரவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பல மாதங்களாக தூய்மைப்படுத்தவில்லை என்றும், மாணவிகளுக்கு சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி வருகிறது என்றும், இந்த குடிநீரைப் பருகும் மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாணவிகளின் பெற்றோர்களும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை மற்றும் பள்ளி நிர்வாகம் உடனடியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதன்மை கல்வி அலுவலர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.