இந்தியாவில் மனித உரிமைகள் மீறல்.. குற்றஞ்சாட்டிய அமெரிக்காவுக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..!

Siva
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:47 IST)
இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிப்பதற்காக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் கலவரம், ஜம்மு காஷ்மீரில் நடக்கும் இன கலவரம் மற்றும் குஜராத் கலவரம் உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டி உள்ளது

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட சில சம்பவங்களை குறிப்பிட்டு நீதிக்கு புறம்பான கொலைகள், பலவந்தமாக காணாமல் போதல், கடுமையான சிறைவாசம் உள்ளிட்டவை இந்தியாவில் நடைபெறுவதாக அறிவித்துள்ளது

அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை ஒரு பக்கமாக சார்பானது என்றும் இந்தியாவின் மோசமான புரிதலை இது பிரதிபலிக்கிறது என்றும் நாங்கள் அதற்கு எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை என்றும் அமெரிக்காவின் அறிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்