காங்கிரஸ் வென்றால் இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பேச்சு..!

Siva

புதன், 24 ஏப்ரல் 2024 (07:51 IST)
எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மத துவேஷ பேச்சு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் தற்போது உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தி விடுவார்கள் என்றும் மக்களின் சொத்துக்களையும் கைப்பற்றி விடுவார்கள் என்று பேசினார்

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியாவுக்கு துரோகம் செய்தவர்கள் என்றும் பொய்யான தேர்தல் அறிக்கையுடன் மக்களை சந்திக்க வந்திருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என்கிறார்கள் இது அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் பேசினார்

காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் ஒரு சில தனிச் சட்டங்களை கொண்டு வருவோம் என்று கூறியது ஷரியா சட்டத்தை அமல்படுத்தப்படும் என்பதையே குறிக்கிறது என்றும் இந்து மக்களின் சொத்துக்களை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள்  சூறையாட அனுமதிக்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்