அரசு ஊழியர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே மதிய உணவு நேரம்: முதல்வர் உத்தரவு

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (16:24 IST)
அரசு ஊழியர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே மதிய உணவு நேரம்: முதல்வர் உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே மதிய உணவு நேரம் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக அதிக நேரம் எடுக்கின்றனர் என்றும் இதனால் அரசு பணிகள் பாதிப்பதாக புகார் வந்தது
 
இந்த புகாரை அடுத்து அரசு ஊழியர்கள் 30 நிமிடங்கள் மட்டுமே மதிய உணவுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தாமதமாக வரும் ஊழியர்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்
 
இந்த உத்தரவு உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்