விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (12:58 IST)
டிராக்டர் பேரணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்தன.  
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ இந்த புகைப்படங்கள்... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்