மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த அந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியத்துடன் நண்பகல் 12மணிக்கு பிறகே டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயற்சித்து குடியரசு தினவிழா நடைபெறுவதற்கு இடையூறாக இருந்ததால் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.