திருப்பதியில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்ய நாளை ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் பக்தர்கள் டிக்கெட்டுகளை புக் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது தெரிந்தது. இதன்படி அக்டோபர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் நாளை அதாவது ஜூலை 18ஆம் தேதி பத்து மணிக்கு வெளியிட உள்ளது.
ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் குலுக்கல் முறையில் வெளியாக இருப்பதாகவும் இதில் 20ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் குலுக்களில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் மேலும் அங்க பிரதட்சணம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளான டிக்கெட்டுகள் 23ஆம் தேதி வெளியாகும் என்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் 24ஆம் தேதி வெளியாகும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
எனவே அக்டோபர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் நாளை காலை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.