தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதனால் மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்வார்கள் என்றும் தெரிந்தது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று காலி ஆகிவிடும் என்பதால் முன்கூட்டியே தயாராக முன்பதிவு செய்ய இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்துவிட்ட நிலையில் இன்று தீபாவளிக்கு முந்தைய நாள் சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.