திருப்பதியில் 80 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (09:41 IST)
திருப்பதியில் 80 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
திருப்பதியில் மிகப்பெரிய ஏரி உடையும் அபாயம் இருப்பதால் 80 கிராமங்கள் நீரில் மூழ்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருப்பதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து உள்ளது
 
இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக திருப்பதியில் உள்ள மிகப்பெரிய ஏரி உடையும் அபாயம் இருப்பதாகவும், ஏரி உடைவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
திருப்பதியில் உள்ள இந்த ஏரி உடைந்தால் காளகஸ்தி உள்பட 80 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்