இந்தியாவில் தடுப்பூசி போடும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் துரிதமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா 100 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை எட்டியது. இந்நிலையில் இதுவரை மாநிலங்களுக்கு மொத்தமாக 125.74 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை மொத்தமாக வாங்கி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பி வருகிறது.
இந்நிலையி கடந்த மூன்று மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களைப் பற்றி நடத்திய ஆய்வில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி போடாததால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.