திறக்கப்படுகிறதா திருப்பதி கோவில்?? – யார் யாருக்கு அனுமதி?

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (15:16 IST)
நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவில்களை திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பல்வேறு தொழில்களுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 8ம் தேதி முதல் கோவில்களை திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை அனுமதிக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக உள்ளூர் மக்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்