ரம்ஜான் சகோதரத்துவத்தின் அடையாளம்! – பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து!

திங்கள், 25 மே 2020 (08:12 IST)
இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைகளை வீட்டிலேயே நடத்திக் கொள்ள அரசு இஸ்லாமிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி “அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். இந்த புனித பண்டிகையானது அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்துகிறது. இந்த நாளில் மக்கள் பூரண நலத்துடன் இருக்க வேண்டுகிறேன்” என கூறியுள்ளார். தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்