நாக்பூர் நகரில் 13 வயது சிறுமியை அவளது சகோதரன், இரண்டு சிறுவர்கள், உள்ளிட்ட 5 பேர் அவளது வீட்டிலேயே கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இக்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். இந்த கொடுமையை நிகழ்த்திய சகோதரன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றவர்கள் 17 மற்றும் 12 வயது சிறுவர்கள் இருவர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் குறித்த பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சிறுவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கணேஷ்பத் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.