மக்களிடம் செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதனால் எளிதில் கண் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும், பல்வேறு பயன்பாடுகளுக்கும் செல்ஃபோன் அத்தியாவசியமானதாக மாறியுள்ளதாலும் மக்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. அத்தியாவசியம் தாண்டி ரீல்ஸ் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது என சிறுவர்கள், இளைஞர்கள் பல விதங்களில் தினமும் செல்போனோடே ஒன்றியுள்ளனர்.
இந்நிலையில் செல்போனை தினசரி எவ்வளவு நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் என்ன ஆபத்து ஏற்படும் என்பது குறித்து ஜாமா நெட்வொர்க் நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் என டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில ஆண்டுகளில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு மேலான நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் அது மூளை பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K