ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

Siva

திங்கள், 24 பிப்ரவரி 2025 (19:15 IST)
ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட, கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மகா கும்பமேளாவின் சிறப்புகள் குறித்து பேசினார். ஒட்டுமொத்த ஐரோப்பா மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர் என்றும், இந்த புனிதமான நிகழ்வை காட்டுமிராண்டி அரசை நடத்தும் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
 
லாலு பிரசாத் யாதவை மறைமுகமாக விமர்சித்த பிரதமர், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் குறித்து அவதூறாக பேசியவர்கள் தற்போது கும்பமேளாவையும் விமர்சித்து வருகிறார்கள் என்றும், பீகார் மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
 
முன்னதாக, மகா கும்பமேளா தேவையற்ற ஒன்று என்றும், இதன் மூலம் மக்களுக்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்