அதிக தொகுதி ஒதுக்கிய தேஜஸ்வி, அவ்வளவு வொர்த் காட்டல!- காங்கிரஸ் மீது அதிருப்தி

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (10:43 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதி ஒதுக்கியதாலேயே தேஜஸ்வி யாதவ் கூட்டணி தோல்வியடைந்ததாக அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்று பின் தங்கியுள்ள நிலையில் பாஜக கூட்டணி 125 இடங்களை பிடித்து பெரும்பான்மையை தாண்டியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தேஜஸ்வி யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளம் 114 இடங்களில் போட்டியிட்டது. தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு 70 இடமும், மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு 19 தொகுதிகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 114க்கு 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 19க்கு 12 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் 70 இடங்களை கேட்டு வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியிலேயே மிகவும் குறைவான வெற்றி இதுதான். இதனால் 70 தொகுதிகளை காங்கிரஸுக்கு தேஜஸ்வி அளித்திருக்காமல் இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இதனால் பீகாரில் காங்கிரஸுக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசிக் கொள்கின்றனர். மேலும் காங்கிரஸ் பல இடங்களில் தோல்வியடைய தனித்து போட்டியிட்ட அசாசுதீன் ஓவைசியும் காரணம் என கூறப்படுகிறது. சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அவருக்கு சாதகமானதால் 5 தொகுதிகளில் அவரது கட்சி வென்றுள்ளது. அந்த தொகுதிகளில் காங்கிரஸின் வாக்குகள் பிரிந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்