இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர்! பிரச்சினை எழுப்புமா எதிர்க்கட்சிகள்?

Prasanth Karthick
செவ்வாய், 30 ஜனவரி 2024 (09:06 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.



கடந்த 2014 முதலாக தொடர்ந்து இரண்டு முறை 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. 2019ல் இரண்டாவது முறையாக பெரும்பான்மை ஆட்சி அமைத்த பாஜகவின் ஆட்சி காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுகு முன்பாக நாளை மறுநாள் (பிப்ரவரி 1) நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் மத்திய கூட்டத்தொடரான இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமளி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் எந்த வித அமளியும் இல்லாமல் நடைபெற எதிர்கட்சிகளிடம் ஒத்துழைப்பை கோரும் பொருட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அவர்களிடம் முன்னதாகவே விவாதித்து அதற்கு சரியான நேரம் ஒதுக்கி தரப்படும் என்று கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்