விழுந்து நெருங்கிய ஹெலிகாப்டர்.. சிவசேனா தலைவருக்கு என்ன ஆச்சு? – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

Prasanth Karthick
வெள்ளி, 3 மே 2024 (15:13 IST)
மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் பணிகளுக்காக சிவசேனா துணை தலைவர் செல்ல இருந்த விமானம் பூமியில் மோதி நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் தேர்தல் பணிகளில் பல்வேறு அட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் துணை தலைவராக உள்ள சுஷ்மா அந்தரே இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் செல்ல இருந்துள்ளார்.

இதற்காக தனியார் நிறுவனத்தில் ஹெலிகாப்டர் புக் செய்யப்பட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டர் மஹத் நகரத்தில் உள்ள ரய்கட் பகுதியில் உள்ள மைதானத்தில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மண்ணில் மோதி நொறுங்கியது.

நல்வாய்ப்பாக அதில் சுஷ்மா அந்தரே பயணித்திருக்கவில்லை. மேலும் விமானத்தை இயக்கிய இரண்டு பைலட்டுகளும் ஹெலிகாப்டர் மண்ணில் மோதியபோது அதிலிருந்து குதித்து விட்டதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்