பிற்பகல் 1 மணி நிலவரம்..! 2ம் கட்ட வாக்குப்பதிவு..!!

Senthil Velan

வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (14:33 IST)
பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 13 மாநிலங்களில் திரிபுராவில் அதிகபட்சமாக 54.47% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் வெறும் 31.77% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
 
அதன்படி, கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 13 மாநிலங்களில் திரிபுராவில் அதிகபட்சமாக 54.47% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் வெறும் 31.77% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ALSO READ: பரம்பரை சொத்து வரி முறை.!. இந்தியாவின் வளர்ச்சியை சிதைத்து விடும்..! நிர்மலா சீதாராமன்..!
 
அசாம் - 46.31%, பீகார் - 33.80%, சத்தீஸ்கர் - 53.09%, ஜம்மு & காஷ்மீர் - 42.88%, கர்நாடகா - 38.23%, கேரளா - 39.26%, மத்தியப் பிரதேசம் - 38.96%, மகாராஷ்டிரா - 31.77%, மணிப்பூர் - 54.26%, ராஜஸ்தான் - 40.39%, திரிபுரா - 54.47%, உத்தரப் பிரதேசம் - 35.73%, மேற்கு வங்கம் - 47.29% வாக்குகள் பதிவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்