காதல் திருமணம் : மகள்,மருமகன், பேத்தியை சுட்டுக் கொன்ற குடும்பத்தினர்!

Sinoj
புதன், 10 ஜனவரி 2024 (14:19 IST)
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம்  நவ்டொலியா கிராமத்தை சேர்ந்தவர் பப்பு சிங். இவருக்கு திராஜ் சிங் என்ற மகன், சாந்தினி குமாரி(23) என்ற மகளும் உள்னனர்.

சாந்தினி குமாரியும் அப்பகுதியைச் சேர்ந்த சந்தன் குமாரும்(40) காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி  இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், ஊரை விட்டு வெளியேறிய நிலையில், வெளியூரில் வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு ரோஷ்னி குமாரி( 2வயது) மகள் உள்ளர்.

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் சாந்தினி குமாரியும், சந்தன்குமாரும் தங்கள் குழந்தையுடன் நவ்டொலியா கிராமத்திற்குச் சென்றனர்.

அப்போது காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வந்த சாந்தினியின் அப்பா ப்பபு சிங், 3 பேரையும் தடுத்தி நிறுத்தி வாக்குவாதம் செய்ததுடன் அவர்கள் 3 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

அப்போது அங்கு வந்த திராஜ் சிங், தன் கையில் இருந்த துப்பாக்கியால் சதோகரி சாந்தினி குமாரி, சந்தன்குமார், ரோஷ்னி குமார் மீது சுட்டார். 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதன்பின்னர், பப்பு சிங் மற்றும் அவரது மகன் திராஜ் சிங் இருவரும் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்