காரில் நாயைக் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர்..வைரலாகும் வீடியோ...

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:08 IST)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தன் காரில் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்ற வீடியோ பரவலாகி வருகிறது.

ராஜஸ்தான் மா நிலம் ஜோத்பூர்  மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்  ரஜ்னீஸ் கால்வா, இவர் தன் காரில் ஒரு தெரு நாயைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து,  டாக் ஹோம் அறக்கட்டளை நிறுவனம் போலீஸில் புகாரளித்தது.

இதையடுத்து, மிருகவதைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீஸார் மருத்துவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும், தன் வீட்டின் அருகே வசித்து வந்ததாகவும் அதை அற்ப்புறப்படுத்த மருத்துவர் கூறியிருந்தார். அவர்,  காரில் செல்லும்போது, வழிமறித்த சிலர் நாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து  சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்