3 கிமீ ஓடியே சென்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்: பெங்களூரில் பரபரப்பு

திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:30 IST)
3 கிமீ ஓடியே சென்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்: பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரு நகரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் திடீரென காரை நிறுத்தி விட்டு ஓடியே மருத்துவமனைக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. 
 
பெங்களூரை சேர்ந்த மருத்துவர் நந்தகோபால் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார் 
 
அப்போது திடீரென கார் டிராபிக்கில் சிக்கி கொண்டதை அடுத்து அவர் பதட்டமானார். மருத்துவமனை இன்னும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில் அவர் காரில் இருந்து இறங்கி நடந்தும் ஓடியும் சென்று மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்தார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் டிராபிக் சிக்னலில் இருந்து இப்போதைக்கு கார் நகரும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால்தான் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதால் ஓடியே வந்தேன் என்று கூறினார். அவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
 

.@SoumiEmd @CCellini @andersoncooper @WCMSurgery @nycHealthy @NYCRUNS https://t.co/54zt4H5SxY #runtowork @ManipalHealth #togetherstronger pic.twitter.com/21NYbZgraX

— Govind Nandakumar MD (@docgovind) September 12, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்