முதல்வர் உயர் நீதிமன்றம் நீதிபதியாகிவிட்டார்- ஒவைசி விமர்சனம்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (16:08 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாகிவிட்டதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஒவைசி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த நுபுர் சார்மா மற்றும் நவீன் ஜிண்டால்  ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதன்பின், அவர்களைக் கட்சிப்பொறுப்பில் இருந்து பாஜக தலைமை நீக்கியது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி உத்தரபிரதேச மா நிலத்தில்  உள்ள பல மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது. இதில் வன்முறை ஏற்பட்டதால், பலர் காயம் அடைந்தனர். 9 மாவட்டங்களிலும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் உள்ள பிரக்யா நகரில் ஏற்பட்ட வன்முறைக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் முகமது வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. மேலும், இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முறைப்படி அனுமதிபெறவில்லை என்ற காரணம் கூறப்பட்டது.

இதுகுறித்து ஏஐஎம் ஐஎம் கட்சித்தலைவர் ஒவைசி, உபி முதல்வர் அலகாபாகத் நீதிபதியாகிவிட்டார். அவர் தற்போது யாரை வேண்டுமானாலும்  குற்றவாளி ஈ அறிவிக்கவும் அவர்களின் வீடுகளை இடித்துத் தள்ள உத்தரவிட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்