பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் முன்மாதிரி சட்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளி, 10 ஜூன் 2022 (22:34 IST)
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஈர்க்கப்பட்டவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல் அமைச்சர், ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று  தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டினால் ஏற்படும்   நிதியிழப்பு, தற்கொலை, ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்தவிளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும்,இதற்காக விளம்பரங்கள் அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் இரண்டு வாரங்களுக்குள், தனது பரிந்துரை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற கே.சந்துரு, தலைமையில் ஐஐடி தொழில் நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கர ராமன்,  லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வாங்கடே ஆகியோர் அடங்கிய குழு  ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுளது.

இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி சட்டம் விரைவில் இயற்றப்படும்.  பிற மாநிலங்களுக்கு வழிகாட்டு வகையில் முன்மாதிரி சட்டமாக இருக்கும் என    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்