புத்த கோவிலில் இருக்கும் சாம்பல்: 74 ஆண்டு கால மர்மத்தை விலக்குவாரா மோடி?

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (10:36 IST)
ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை வைத்து டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என நேஜாதியின் மகள் அனிதா போஸ் கோரிக்கை வைத்துள்ளார். 
 
சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்து  விட்டதாகவும், அவரது உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
நேதாஜி மரணம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ உண்மைகளும் இன்று வரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேதாஜியின் மகள் அனிதா போஸ் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு,
ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் என் தந்தையில் சாம்பலை எடுத்து டி.என்.ஏ சோதனை மேற்கொண்டால் அவரின் மரணத்தின் மர்மம் விலகிவிடும், இதற்கு இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நேதாஜியின் மரணம் தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்தி வெளியிட்டார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் நேதாஜியின் சாம்பல் டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். 
எனவே, விரைவில் நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனைக்கு விரைவில் உட்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்