கல்லா கட்டிய மத்திய அரசு... பெட்ரோல் & டீசல் விலையால் வரி வசூல் அமோகம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (13:04 IST)
கடந்த நிதி ஆண்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

 
பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டி ரூ.110ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் அதேபோல் டீசல் விலை ரூபாய் 100ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.19.98- ல் இருந்து ரூ.32.09- ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று டீசல் மீதான கலால் வரி ரூ.15.83ல் இருந்து ரூ.31.08ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் கடந்த நிதி ஆண்டில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத வசூல் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்