இந்தியாவில் 40 கோடி பாகுபலிகள்: பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (12:51 IST)
இந்தியாவில் தற்போது 40 கோடி பாகுபலி இருக்கின்றார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் 
 
இதன் காரணமாக இந்தியாவில் தடுப்பூசி போடுவதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது இந்தியாவில் சுமார் 40 கோடி பேருக்கு ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் இந்தியாவில் தற்போது 40 கோடி பேர் பாகுபலிகள் இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
மேலும் உலகமே பெரும் தொற்றின் பிடியில் உள்ள நிலையில் அர்த்தமுள்ள விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை  கேட்டுக்கொண்டார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்