ஆசிரியரை செருப்பால் அடித்து ஓட ஓட விரட்டிய மாணவர்கள்.. என்ன காரணம்?

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (15:31 IST)
குடி போதையுடன் பள்ளிக்கு வந்த ஆசிரியரை மாணவர்கள் செருப்பால் அடித்து ஓட ஓட விரட்டிய சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து உள்ளது 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி போதையுடன் வந்து மாணவர்களை திட்டுவதும் அடிப்பதுமாக இருந்து உள்ளார். 
 
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் அவர் போதையுடன் வந்த போது மாணவர் ஒருவர் பாடத்தில் சந்தேகம் கேட்க அந்த மாணவரை தகாத வார்த்தைகளால் ஆசிரியர் திட்டி உள்ளதாக தெரிகிறது. 
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆசிரியரை செருப்பால் அடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் மாணவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என அந்த ஆசிரியர் ஓட,  அவரை ஓட ஓட விரட்டி மாணவர்கள் செருப்பாலும் கல்லாலும் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
 
இந்த நிலையில் இது குறித்து மாணவர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ள நிலையில் துறை ரீதியான நடவடிக்கை அந்த ஆசிரியர் மீது எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
போதையுடன் வந்த ஆசிரியரை பழனி மாணவர்கள் தைரியமாக செருப்பால் அடித்து ஓட ஓட விரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்