எவ்வளவு எச்சரித்தும் கேக்கல.. மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:03 IST)
விசாகப்பட்டிணம் – செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட அதிவேக விரைவு ரயில்களான வந்தே பாரத் ரயில்கள் சேவை நாடு முழுவதும் பல வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வந்தே பாரத் ரயில்கள் கால்நடைகள் மீது மோதி சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக இந்த ரயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபமாக மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இதுபோல கற்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. நேற்று ஆந்திராவில் விசாகப்பட்டிணம் – செகந்திரபாத் சென்ற வந்தே பாரத் ரயிலை மர்ம ஆசாமிகள் கற்கள் கொண்டு தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இதனால் ரயில் 4 மணி நேரம் கால தாமதாமாக புறப்பட்டு சென்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்குள் இது மூன்றாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்