வந்தே பாரத் ரெயில் மீது மீண்டும் கல்வீச்சு: விசாரணைக்கு உத்தரவு

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (15:28 IST)
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்பதும் அதிவேக ரயிலான இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு பயணிகள் மத்தியில் உள்ளது என்பதும் தெரிந்தது.. 
 
இந்த நிலையில் ஆங்காங்கே வந்தே பாரத் ரயில் மீது அவ்வப்போது கல் எரியும் சம்பவம் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மீண்டும் ஒரு கல் எறி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேற்குவங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் திடீரென சரமாரியாக கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர் 
 
இந்த கல்விச் தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டு உடனடியாக சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்