தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!

Siva

வியாழன், 20 மார்ச் 2025 (07:29 IST)
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று திடீரென தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் உடனே விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை தமிழக மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. மேலும், மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, படகு பழுது காரணமாக எல்லை தாண்டியதாக மீனவர்கள் விளக்கம் அளித்தனர். அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை கடற்படை, மீனவர்களை விடுதலை செய்ததோடு, அவர்களின் படகுகளையும் திருப்பி ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டவுடன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்