காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு பலியான இளம்பெண்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (01:32 IST)
ஆந்திராவில் காதலிக்க மறுத்ததால் கடந்த டிசம்பர் மாதம் சந்தியாராணி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் இதே காரணத்தால் மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐதராபாத் இளம்பெண் ரூபா. 24 வயதான் ரூபா, ஏழை குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் குடும்பத்தினர்களுக்கு உதவுவதற்காக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் கேர்ள் ஆக பணிபுரிந்து வந்தார்.

இதே சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஆனந்த் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாகவே ரூபாவை காதலித்து வந்ததாகவும், ஆனால் ரூபா அவருடைய காதலை ஏற்க மறுத்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூபா தங்கியிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு சென்று தன்னை காதலிக்கவில்லை என்றால் ரூபாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய ரூபாவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி ரூபா மரணம் அடைந்தார். இந்த கொலையை ஆனந்த் தான் செய்திருக்க வேண்டும் என்று ரூபாவின் அறையில் தங்கியிருந்த பெண் கூறியதை அடுத்து ஆனந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்