இந்நிலையில் சேகருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களாக கடன் தவணையை சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் தேன்மொழியின் வீட்டிற்கு சென்று உடனடியாக கடன் தவணையை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். தவணையை செலுத்த அவகாசம் கொடுங்கள் என்று தேன்மொழி கேட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த வங்கி ஊழியர்கள் தேன்மொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த தேன்மொழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேன்மொழியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.