திருமண விழாவின் போது நடந்த சாகச நிகழ்ச்சியில், கழுத்தில் வெட்டுபட்ட மாணவனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், காயமடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐத்ராபாத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிச்சய நிகழ்ச்சியின் போது சில இளைஞர்கள் கத்தியை சுற்றும் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் சையது ஹமீதுக்கு(16) கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிரிந்தவர்கள் மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், 'சிகிச்சை அளிக்க வசதியில்லை' என இரு மருத்துவமனைகள் திருப்பி அனுப்பின. இதற்கிடையே அதிக ரத்தம் வெளியேறியதில் சையது ஹமீத் பரிதாபமாக உயிரிழந்தான். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.