ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்.. எந்தெந்த ரூட்களில் இயங்கும்?

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (15:45 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுவரும் உள்ள நிலையில், இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலில் தற்போது உட்கார்ந்து செல்லும் வசதி மட்டுமே இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது
 
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலைகள் தயாராகி வருவதாகவும் இந்த ரயில் பயணத்தை குறைக்கும் வகையில் வேகமாக இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் முதல் கட்டமாக டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - ஹௌரா ஆகிய ரூட்களில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்றும் தேர்தலுக்கு முன்பே இந்த ரயில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்