15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

Siva

வியாழன், 27 மார்ச் 2025 (11:24 IST)
புதுச்சேரியை சேர்ந்த, டிங்கரிங் வேலை செய்யும் 42 வயது சுரேஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதன் விளைவாக, அந்த சிறுமி கர்ப்பமாகி, அவர் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இரு தரப்பின் விசாரணை முடிந்த நிலையில், இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
 
குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சுரேஷுக்கு உயிருடன் வாழும் வரை சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி பரிந்துரை செய்தார்.
 
இந்த தீர்ப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்