எங்கள்ட்டயே நல்ல தண்ணி இருக்கு.. பிளாஸ்டிக் பாட்டில் வேண்டாம்! – சிக்கிம் அரசு தடை!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (12:04 IST)
சிக்கிம் மாநிலத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இமயமலை தொடர் அருகே அமைந்துள்ள இந்திய மாநிலம் சிக்கிம். இமயமலை பனியிலிருந்து உருகி வரும் தூய்மையான தண்ணீர் கொண்ட ஆறு சிக்கிமை தாண்டிதான் செல்கிறது.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியின்போது சிக்கிமின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இமயமலையில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பிஸ் தமாங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சிக்கிமில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்