இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தீபாவளி பண்டிகைக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் கூட்டத்தை அனுமதித்தால் மேலும் கொரோனா அதிகரிக்கக்கூடும் என்றும், காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இதனால் பல மாநிலங்களில் தீபாவளி சமயங்களில் வெடி விற்கவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை 4 மாதங்களுக்கு மாநிலத்தில் பட்டாசுகள் விற்கவோ, வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.