600 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (12:27 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை நிப்டி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்தே சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து தற்போது 58600 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 476 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று காலை முதல் பங்கு சந்தை விலை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நம்பிக்கையுடன் உள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்