பங்குச்சந்தையில் இன்று ஏற்ற இறக்கம்: முதலீட்டாளர்கள் மனநிலை
வியாழன், 24 மார்ச் 2022 (12:05 IST)
பங்குச் சந்தையில் இன்று ஏற்ற இறக்கம் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் மனநிலையும் குழப்பத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தான் பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இன்று காலை சென்செக்ஸ் உயரத் தொடங்கிய நிலையில் தற்போது 60 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 57 ஆயிரத்து 628 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் இன்று காலை தேசிய பங்குச்சந்தை நிப்டியும் அதிகரித்த நிலையில் தற்போது 15 புள்ளிகள் குறைந்து 17230 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றும் நாளையும் பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் இருக்காது என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்