செந்தில் பாலாஜி வழக்கு..! உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED.!!

Senthil Velan
திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:00 IST)
செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்  உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டுள்ளது.
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்யாமல் அமலாக்த்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இதை அடுத்து அமலாக்கத்துறை தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது.

எனவே செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்றும் விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் அமலாக்கத்துறை பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது.! வி.சி.க அறிவிப்பு..!!
 
மேலும் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்